Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 21 மே (ஹி.ச.)
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 27-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,
சென்னையில் ஜூன் 27 ஆம் தேதி மதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் கட்சியின் முக்கிய அமைப்பு ரீதியான முடிவுகள் எடுக்கப்படும்.
இந்த பொதுக்குழு கூட்டத்தின் முக்கிய அம்சமாக, கட்சியின் மூன்று துணை பொதுச்செயலாளர் பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது. காலியாக உள்ள அந்தப் பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
துணை பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் வரும் மே 25-ஆம் தேதி முதல் வேட்புமனுக்களை பெற்றுக்கொள்ளலாம்.
வேட்புமனு தாக்கல் செய்யும் ஒவ்வொரு வேட்பாளரையும், குறைந்தபட்சம் 25 பொதுக்குழு உறுப்பினர்கள் முன்மொழிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாத வேட்புமனுக்கள் ஏற்கப்பட மாட்டாது .
இவ்வாறு வைகோ கூறினார்.
பொதுக்குழு கூட்டத்திற்கான இடம் மற்றும் நேரம் குறித்த விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தேர்தல் மதிமுகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b