Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 மே (ஹி.ச.)
சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் இருந்து மதுரைக்கு நெல் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி ஓட்டுனரிடம், அபராதம் விதிப்பதாக கூறி பணம் வசூலிக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஆன்ட்டோ என்பவர், ரெட்ஹில்ஸ் பகுதியில் இருந்து 20 மூட்டை நெல்லை லாரியில் ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி சென்றுள்ளார்.
அப்போது மதுரை டோல்கேட் அருகே வாகனத்தை மறித்த அதிகாரிகள், அதிக அளவில் நெல் மூட்டைகள் ஏற்றி சென்றதாக கூறி ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அதிகாரிகளுக்கும் லாரி ஓட்டுனருக்கும் இடையே பேரம் நடந்ததாகவும், முதலில் ரூ.3 ஆயிரம் வரை பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இறுதியாக கூகுள் பே மூலம் ரூ.2,500 பெற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதில் அதிகாரிகள் பணம் கேட்டு பேரம் பேசும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ