மெரீனா கடற்கரையில் பெண்களிடம் காவலர்கள் தகாத பேச்சு - வைரல் வீடியோ குறித்து விசாரணை
சென்னை, 21 மே (ஹி.ச.) சென்னை மெரீனா கடற்கரைக்கு வந்த பெங்களூருவைச் சேர்ந்த இரண்டு பெண்கள், தவெக தலைவர் விஜய் தேர்தலில் வெற்றி பெற்றதை கொண்டாட சென்னை வந்ததாக கூறப்படுகிறது. மேலும், மெரீனா கடற்கரையை சுற்றிப் பார்ப்பதற்கும் சூரிய உதயத்தை காணவும்
Pol


சென்னை, 21 மே (ஹி.ச.)

சென்னை மெரீனா கடற்கரைக்கு வந்த

பெங்களூருவைச் சேர்ந்த இரண்டு பெண்கள், தவெக தலைவர் விஜய் தேர்தலில் வெற்றி பெற்றதை கொண்டாட சென்னை வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், மெரீனா கடற்கரையை சுற்றிப் பார்ப்பதற்கும் சூரிய உதயத்தை காணவும் அவர்கள் அதிகாலை நேரத்தில் கடற்கரைக்கு சென்றுள்ளனர்.

அப்போது ரோந்து பணியில் இருந்த 2 காவலர்கள் பெண்களிடம் தகாத முறையில் பேசியதாக கூறி, சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இது தொடர்பாக பெண்கள் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ புகாரும் அளிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், வீடியோ வைரலானதைத் தொடர்ந்து காவல்துறை உயரதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ