ஜம்மு-காஷ்மீரில் இரும்புக்கடை ஒன்றில் பயங்கர தீ விபத்து
உதம்பூர், 21 மே (ஹி,.ச.) ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள சபுத்ரா பஜார் பகுதியில் செயல்பட்டு வந்த இரும்புக்கடை ஒன்றின் மூன்றாவது தளத்தில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தைத் தொடர்ந்து, தீயணைப்பு மற்றும் அவசர சேவைத
Massive Fire Breaks Out at an Iron Shop


உதம்பூர், 21 மே (ஹி,.ச.)

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள சபுத்ரா பஜார் பகுதியில் செயல்பட்டு வந்த இரும்புக்கடை ஒன்றின் மூன்றாவது தளத்தில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்தைத் தொடர்ந்து, தீயணைப்பு மற்றும் அவசர சேவைத் துறையினர் விரைந்து செயல்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு குழுக்கள் உடனடியாக வந்து சேர்ந்து, மீட்புப் பணிகளைத் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சந்தையின் பல பகுதிகளில் கரும்புகை பரவியது.

தீயைக் கட்டுப்படுத்த இந்திய ராணுவத்தின் சிறப்புப் பிரிவுகள் உட்பட எட்டுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் களமிறக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

தீயைக் கட்டுக்குள் கொண்டுவரவும், அருகிலுள்ள வணிக வளாகங்களுக்கு பரவாமல் தடுக்கவும் கூட்டு அவசரகால குழுக்கள் தற்போது வரை ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், தீயணைப்பு பணிகள் நடைபெற்று வந்த பரபரப்பான சந்தைப் பகுதியில் ஏராளமான உள்ளூர் மக்கள் திரண்டனர்.

நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், தீயை முழுமையாக அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Hindusthan Samachar / vidya.b