Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 21 மே (ஹி.ச.)
நரேந்திர மோடி தலைமையிலான வெளிநாட்டு அரசுமுறை சுற்றுப்பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
5 நாடுகள் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நேற்று டெல்லி திரும்பினார்.
முன்னதாக, பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது சர்வதேச வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி வந்தடைந்த பிரதமர் மோடிக்கு, மத்திய மந்திரிகள் மற்றும் உயரதிகாரிகள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஸ்வீடன் பயணத்தின் போது அந்நாட்டின் இளவரசி விக்டோரியா இளவரசி, பிரதமர் மோடிக்கு “ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார்” என்ற உயரிய விருதை வழங்கி கவுரவித்தார். அதற்கு பதிலாக, இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கோண்ட் ஓவியத்தை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.
இத்தாலி பயணத்தின் போது, அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்த பிரதமர் மோடி, “மெலோடி ” எனப்படும் சாக்லெட் பாக்கெட்டை பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இது இரு தலைவர்களுக்கிடையேயான நட்புறவை வெளிப்படுத்தும் விதமாக கவனம் பெற்றுள்ளது.
இந்த சுற்றுப்பயணம், இந்தியாவின் சர்வதேச உறவுகளை மேலும் வலுப்படுத்திய முக்கியமானதாக கருதப்படுகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA