சாத்தூரில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35 வது நினைவு தினம் அனுசரிப்பு
விருதுநகர், 21 மே (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவரது 35 வது நினைவு தினத்தை முன்னிட்டு ராஜீவ் காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்
க


விருதுநகர், 21 மே (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவரது 35 வது நினைவு தினத்தை முன்னிட்டு ராஜீவ் காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட பொதுச் செயலாளர் ஜோதி நிவாஸ் சாத்தூர் நகர காங்கிரஸ் தலைவர் ஐயப்பன் மற்றும் நகர வட்டார காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இளைஞர் அணி காங்கிரஸ் நிர்வாகிகள் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு ராஜீவ் காந்தி உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தீவிரவாதத்தை ஒழிக்கவும் மதவாதத்தை அடியோடு ஒழிக்கவும் அமைதி ஆன இந்தியாவை வலியுறுத்தியும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Hindusthan Samachar / Durai.J