ஃபால்டா தொகுதியில் இன்று மறு வாக்குப்பதிவு - மதியம் 1 மணி நிலவரப்படி 60.43% வாக்குப்பதிவு
ஃபால்டா, 21 மே (ஹி.ச.) மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள 144-பல்தா சட்டமன்றத் தொகுதியில் இன்று மறுவாக்குப்பதிவு தொடங்கியது. மேற்கு வங்க மாநிலத்தில் 2026 ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய இரு கட்டங்களாக மாநிலத்தில் வாக்குப்பதிவு
ஃபால்டா தொகுதியில் இன்று மறு வாக்குப்பதிவு - மதியம் 1 மணி நிலவரப்படி 60.43% வாக்குப்பதிவு


ஃபால்டா, 21 மே (ஹி.ச.)

மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள 144-பல்தா சட்டமன்றத் தொகுதியில் இன்று மறுவாக்குப்பதிவு தொடங்கியது.

மேற்கு வங்க மாநிலத்தில் 2026 ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய இரு கட்டங்களாக மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று, 207 இடங்களைக் கைப்பற்றி மாநிலத்தில் முதன்முறையாக ஆட்சி அமைத்தது. சுவேந்து அதிகாரி முதலமைச்சராக பதவியேற்றார்.

இந்த நிலையில் 2026 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, ஃபால்டா தொகுதியின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையம் (ECI) உத்தரவிட்டது.

மேலும், பச்சிம் மக்ராஹத் மற்றும் டைமண்ட் ஹார்பர் தொகுதிகளில் உள்ள 15 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

ஏப்ரல் 29 அன்று அதிக எண்ணிக்கையிலான வாக்குச்சாவடிகளில் கடுமையான தேர்தல் குற்றங்கள் மற்றும் ஜனநாயக செயல்முறை சீர்குலைக்கப்பட்டதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள 144-ஃபால்டா சட்டமன்றத் தொகுதியில் உள்ள அனைத்து 285 வாக்குச்சாவடிகளிலும் இன்று காலை முதல் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.

இன்று மாலை 6 மணி வரை தொடர நடைபெறவுள்ள இந்த வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி, வாக்குப்பதிவு விகிதம் 60.43 சதவீதத்தைத் தொட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், இத்தொகுதியின் எந்தப் பகுதியிலிருந்தும் எவ்விதமான விரும்பத்தகாத சம்பவங்களும் பதிவாகவில்லை.

Hindusthan Samachar / vidya.b