Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 மே (ஹி.ச.)
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் கடந்த 2013- ஆம் ஆண்டு திருமணமாகி 7 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் அவர்களுக்கு மே 21, 2026 அன்று 2வதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து பல்வேறு கட்சியினர், திரை பிரபலங்கள், நாம் தமிழர் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் ஆக்ரோஷமான பேச்சுக்கள் மூலம் தனக்கென ஒரு பெரும் அரசியல் செல்வாக்கை பெற்றிருக்கிறார்.
கட்சி தொடங்கியதில் இருந்தே அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டியிட்டு வருகிறார்.
இவருக்கும் மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
மேலும் இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் சீமான் – கயல்விழி தம்பதிக்கு மே 21, 2026 இன்ன்று இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதனையடுத்து அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் மற்றும் நாதக தொண்டர்கள் சீமானுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN