சூர்யாவின் ‘கருப்பு’ படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி
சென்னை, 21 மே (ஹி.ச.) நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. வழக்கறிஞர் ஆர்.எஸ். தமிழ்வேந்தன் தாக்கல் செய்த மனுவில், ‘கருப்பு’ திரை
Karuppu


சென்னை, 21 மே (ஹி.ச.)

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

வழக்கறிஞர் ஆர்.எஸ். தமிழ்வேந்தன் தாக்கல் செய்த மனுவில், ‘கருப்பு’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் இந்திய நீதித்துறை, நீதிமன்றங்கள், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

மேலும், படத்தின் ஒவ்வொரு காட்சியும் சுதந்திரமான மற்றும் தனித்துவமான இந்திய நீதித்துறையை விமர்சிக்கும் விதமாக இருப்பதால், திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமிநாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்கு பிறகு நீதிபதிகள், “திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் பேச்சு சுதந்திரத்தின் வரம்புக்குள் வருகின்றன.

அதனை தடை செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனக் குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Hindusthan Samachar / P YUVARAJ