Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 மே (ஹி.ச.)
தவெக கட்சிக்கு வாக்களிக்கும்படி பெற்றோரை நிர்பந்திக்க வேண்டும் என குழந்தைகளுக்கு வேண்டுகோள் விடுத்து தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம் செய்தது குறித்து விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் வாசுகி தாக்கல் செய்த மனுவில், தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக, அதிமுக மற்றும் தவெக கட்சியினர் வாக்காளர்களிடம் செல்வாக்கு செலுத்தும் வகையில் செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது, சிறுவர்களை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தி சுரண்டியது போன்ற செயல்கள் நடைபெற்றதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் திமுக, அதிமுக மற்றும் தவெக கட்சிகளும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மே 29ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ