அமைச்சரவை விரிவாக்கத்தில் ஏமாற்றம் – அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் அவசர ஆலோசனை கூட்டம் தொடக்கம்
சென்னை, 21 மே (ஹி.ச.) தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவை விரிவாக்கத்தில், அக்கட்சியின் அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அமைச்சரவை பட
சி வி


சென்னை, 21 மே (ஹி.ச.)

தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவை விரிவாக்கத்தில், அக்கட்சியின் அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால், அமைச்சரவை பட்டியலில் அவர்களுக்கு இடமளிக்கப்படாதது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழ்நிலையில், அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க, சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில், அமைச்சரவை விரிவாக்கத்தில் ஏற்பட்ட அதிருப்தி, எதிர்கால அரசியல் நிலைப்பாடு மற்றும் சட்டமன்றத்தில் எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் பதவி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆதரவு எம்.எல்.ஏக்கள் எந்த நிலைப்பாட்டை எடுக்கப் போகிறார்கள் என்பது தமிழக அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

கூட்டத்தின் முடிவில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P