Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 மே (ஹி.ச.)
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த சண்முகம்,
ஏன் முதலில் ‘வந்தே மாதரம்’ மற்றும் கடைசியாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது என்று முதலமைச்சரிடம் கேட்டோம். அதற்கு, ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மத்திய அரசின் உத்தரவுப்படி இந்த நடைமுறையையே பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் கூறினார்.
மேலும், இந்த நடைமுறையை மாற்றுவதற்காக அரசு தரப்பில் ஆளுநருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், ஆனால் அதனை ஆளுநர் ஏற்க மறுத்துவிட்டதாகவும் முதலமைச்சர் தெரிவித்ததாக பெ.சண்முகம் கூறினார்.
மத்திய அரசின் பிரதிநிதி என்ற முறையில் மத்திய அரசின் உத்தரவைத்தான் பின்பற்ற வேண்டும் என ஆளுநர் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P