தமிழ்நாடு அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு - செங்கோட்டையனுக்கு துறை மாற்றம்
சென்னை, 21 மே (ஹி.ச.) தமிழ்நாடு அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அமைச்சர் செங்கோட்டையன் வசமிருந்த நிதித்துறை ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. மரிய வில்சனுக்கு மாற்றப்பட்டுள்ளது. புதிய இலாகா ஒதுக்கீட்டின்படி, சே
தமிழ்நாடு அரசு


சென்னை, 21 மே (ஹி.ச.)

தமிழ்நாடு அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், அமைச்சர் செங்கோட்டையன் வசமிருந்த நிதித்துறை ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. மரிய வில்சனுக்கு மாற்றப்பட்டுள்ளது.

புதிய இலாகா ஒதுக்கீட்டின்படி, சேலம் தெற்கு எம்.எல்.ஏ. விஜய் தமிழன் பார்த்திபனுக்கு போக்குவரத்துத்துறை, ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. ரமேஷுக்கு இந்து அறநிலையத்துறை, மேலூர் எம்.எல்.ஏ. விஸ்வநாதனுக்கு உயர்கல்வித்துறை, கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. விக்னேஷுக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி எம்.எல்.ஏ. ஸ்ரீநாத் மீன்வளத்துறை அமைச்சராகவும், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. ரஞ்சித்குமார் வனத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், குமாரபாளையம் எம்.எல்.ஏ. விஜயலட்சுமிக்கு பால்வளத்துறை, அவிநாசி எம்.எல்.ஏ. கமலிக்கு கால்நடைத்துறை, கும்பகோணம் எம்.எல்.ஏ. வினோத்துக்கு வேளாண்துறை, திருவாடனை எம்.எல்.ஏ. ராஜீவுக்கு சுற்றுச்சூழல்துறை வழங்கப்பட்டுள்ளது. கடலூர் எம்.எல்.ஏ. ராஜ்குமார் வீட்டுவசதித்துறை, அரக்கோணம் எம்.எல்.ஏ. காந்திராஜ் கூட்டுறவுத்துறை, ஓட்டபிடாரம் எம்.எல்.ஏ. மதன்ராஜா சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை பொறுப்புகளை ஏற்கின்றனர்.

அதேபோல், ராஜபாளையம் எம்.எல்.ஏ. ஜெகதீஸ்வரிக்கு சமூகநலன் மற்றும் மகளிர் நலத்துறை, கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமாருக்கு சுற்றுலாத்துறை, ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. விஜய் பாலாஜிக்கு கைத்தறி மற்றும் ஜவுளித்துறை, ராசிபுரம் எம்.எல்.ஏ. லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரி எம்.எல்.ஏ. குமாருக்கு AI மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை, ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. தென்னரசுக்கு வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை, கோவை வடக்கு எம்.எல்.ஏ. சம்பத் குமாருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, அறந்தாங்கி எம்.எல்.ஏ. முகமது பர்வேஸுக்கு தொழிலாளர் நலத்துறை மற்றும் தாம்பரம் எம்.எல்.ஏ. சரத்குமாருக்கு மனிதவளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P