இன்று ராஜீவ் காந்தி நினைவு தினம் - ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி
காஞ்சிபுரம், 21 மே (ஹி.ச.) முன்னாள் பிரதமர், பாரத ரத்னா ராஜிவ்காந்தியின் 35-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ்காந்தி நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் ம
இன்று ராஜீவ் காந்தி நினைவு தினம்  - ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி


காஞ்சிபுரம், 21 மே (ஹி.ச.)

முன்னாள் பிரதமர், பாரத ரத்னா ராஜிவ்காந்தியின் 35-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ்காந்தி நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ் குமார், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் நிவேதித் ஆல்வா மற்றும் சூரஜ் எம்.என். ஹெக்டே, அகில இந்திய காங்கிரஸ் மிசோரம் மேகாலயா அருணாச்சல பிரதேச பொறுப்பாளர் டாக்டர் செல்வகுமார்,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் தங்கபாலு, பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், அகில இந்திய காங்கிரஸ் தொழில் வல்லுநர்கள் பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் எஸ்.ஏ. அருள் ராஜ் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களுடன் பேசிய செல்வப்பெருந்தகை,

ராஜீவ் காந்தியின் 35 ஆவது நினைவு நாள்அனுசரிக்கப்பட்டது. மிகவும் உருக்கமான நிகழ்ச்சி. தலைவர் ராஜீவ் காந்தி தான் பஞ்சாயத்து ராஜ், தி சயின்ஸ் ரெவல்யூஷன் போன்ற பல திட்டங்களை இந்தியா தலை நிமிர்ந்து நிற்பதற்கு கொண்டு வந்தவர்

என அவர் குறிப்பிட்டார்.

Hindusthan Samachar / vidya.b