சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் பதிவியேற்பு
சென்னை , 22 மே (ஹி.ச.) சென்னை, வேப்பேரியில் அமைந்துள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், சென்னை பெருநகரக் காவல் ஆணையராக அமல்ராஜ் ஐ.பி.எஸ் பொறுப்பேற்கும் விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வின்போது, உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள
Amalraj Assumes Office as Chennai Police Commissioner


சென்னை , 22 மே (ஹி.ச.)

சென்னை, வேப்பேரியில் அமைந்துள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், சென்னை பெருநகரக் காவல் ஆணையராக அமல்ராஜ் ஐ.பி.எஸ் பொறுப்பேற்கும் விழா இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வின்போது, உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் முன்னிலையில், அமல்ராஜ் சென்னை பெருநகரக் காவல் ஆணையராக முறைப்படி இன்று பொறுப்பேற்றார்.

அதனைத் தொடர்ந்து, ஆணையர் அமல்ராஜ் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

அதிகாரப்பூர்வ கோப்புகளில் கையெழுத்திட்டு, தனது பணிகளைத் தொடங்கினார்.

சென்னை பெருநகரக் காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த அபின் தினேஷ் மோடக் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் சிபிசிஐடி (CBCID)-யின் கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கூடுதல் டிஜிபி நிலையில் உள்ள அமல்ராஜ், புதிய சென்னை பெருநகரக் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் 1996-ஆம் ஆண்டு இந்தியக் காவல் பணியில் இணைந்து, திருப்பூர் மாவட்டத்தின் உதவி காவல் கண்காணிப்பாளராகத் தனது பணியை தொடங்கினார்.

பின்னர், பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய இவர், காவல் துறைத் தலைவர் பதவிக்குப் பதவி உயர்வு பெற்றார்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவரான அமல்ராஜ், இதற்கு முன்பு சென்னை காவல் துறையின் கூடுதல் ஆணையராகப் பணியாற்றியுள்ளார்.

கூடுதல் டிஜிபி பதவிக்குப் பதவி உயர்வு பெற்ற பிறகு, தாம்பரம் காவல் ஆணையராகவும் இவர் இரண்டு முறை பணியாற்றியுள்ளார்,

என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b