Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 22 மே (ஹி.ச.)
தேசிய அளவிலான குழந்தைகள் ஃபேஷன் ஷோ போட்டி அண்மையில் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நடைபெற்றது.
ஃபேஷன் ரன் வே சார்பாக நடைபெற்ற இப்போட்டியில் தமிழ்நாடு சார்பாக கோவையை சேர்ந்த ரக்ஷன் உட்பட திவித்,ஜோனா, ,அட்னான் ஆகியோர் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் கோவை வந்த சேர்ந்த ரக்ஷனுக்கு அவரது பெற்றோர்கள் மற்றும் ராணாவின் மாடலிங் அகாடமி தலைமை நிர்வாக அதிகாரி சிவ குமார் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
ஜூனியர் மாடல் இன்டர்நேஷனல் இந்தியா ஃபைனல்ஸ் போட்டியில் வென்ற சிறுவன் ரக்ஷன் அடுத்து தாய்லாந்தில் நடைபெற உள்ள சர்வதேச அளவில் நடைபெற உள்ள போட்டிக்கு தயாராகி வருவதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.
சர்வதேச அளவில் மிகுந்த புகழ்பெற்ற இந்த குழந்தைகள் ஃபேஷன் ஷோ போட்டியில், அறிவு, நேர்காணல் திறன், பாரம்பரிய உடை, மேடை நடிப்பு மற்றும் பல்வேறு சுற்றுகளாக நடைபெறும் போட்டிக்கு சிறுவன் ரக்ஷன் தயாராகி வருகிறார்.
குழந்தைகளின் தன்னம்பிக்கை, ஒழுக்கம், திறமைகள் மற்றும் மேடை ஆற்றலை மேம்படுத்தும் வகையில் நடைபெறும் இந்த போட்டியில், தமிழக குழந்தைகள் உலக அரங்கில் தங்கள் திறமையை நிரூபித்து வருவது பெருமைக்குரியது ஆகும். இவர்களின் முயற்சி மற்றும் பெற்றோரின் ஆதரவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b