அரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது - தமிழக வெற்றிக் கழகத் தோழர்களுக்கு பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்
சென்னை, 22 மே (ஹி.ச.) தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் மக்கள் சேவையில் தொடர்ந்து பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும், ஆனால் மக்கள் பிரதிநிதிகள் அல்லாதவர்கள் அரசு சார்ந்த விவகாரங்களில் தலையிடவோ, ஆய்வுகள் மேற்கொள்ளவோ கூடாது என்றும் கழகப் பொதுச்செ
புஸ்ஸி


சென்னை, 22 மே (ஹி.ச.)

தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் மக்கள் சேவையில் தொடர்ந்து பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும், ஆனால் மக்கள் பிரதிநிதிகள் அல்லாதவர்கள் அரசு சார்ந்த விவகாரங்களில் தலையிடவோ, ஆய்வுகள் மேற்கொள்ளவோ கூடாது என்றும் கழகப் பொதுச்செயலாளர் என். ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வெற்றித் தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சரின் தலைமையில் அமைந்துள்ள மக்களாட்சியை மக்கள் வரவேற்று வரும் நிலையில், கழகத்தினரின் பொறுப்புணர்வு மேலும் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கழகத்தின் நோக்கம் மக்கள் சேவையை முழுமையாக மேற்கொள்வதே என்பதால், கழகத் தோழர்கள் தொடர்ந்து மக்கள் நலப் பணிகளில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, கழகத்திற்கும் முதலமைச்சரின் நற்பெயருக்கும் எந்தவித களங்கமும் ஏற்படாத வகையில் நடந்து கொள்வது அனைவரின் கடமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கழகத் தலைவர் ஒப்புதலுடன் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில், மக்கள் பிரதிநிதிகள் அல்லாத கழகத் தோழர்கள் அரசு சார்ந்த விவகாரங்களில் தலையிடுவது அல்லது ஆய்வுகள் மேற் கொள்வது அறவே கூடாது, எனத் அந்த அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P