முதல் முறையாக டெல்லி பயணம் மேற்கொள்ளும் முதல்வர் விஜய் - ஜே.என்.யு.வில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பு
சென்னை, 22 மே (ஹி.ச.) தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அடுத்த வாரம் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சராக பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் டெல்லி பயணம் இதுவாகும். பயணத்தின் முக்கிய நிகழ
முதலமுறையாக டெல்லி பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் ஜோசப் விஜய் - ஜே.என்.யு.வில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா


சென்னை, 22 மே (ஹி.ச.)

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அடுத்த வாரம் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சராக பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் டெல்லி பயணம் இதுவாகும்.

பயணத்தின் முக்கிய நிகழ்வாக, புது டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் விஜய் திறந்து வைக்க உள்ளார்.

தமிழகத்தின் பண்பாட்டு அடையாளமான திருக்குறளை தேசிய அளவில் கொண்டு செல்லும் முயற்சியாக இந்த சிலை திறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து, தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கலந்துரையாட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரையும் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சரின் டெல்லி பயண அட்டவணை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b