Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 மே (ஹி.ச.)
தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக அமைச்சர்களாக இணைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் திண்டிவனம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வன்னியரசு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஷாஜகான் ஆகியோருக்கு இன்று காலை ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
பதவியேற்பைத் தொடர்ந்து புதிய அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, வன்னியரசுக்கு சமூக நீதி துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், ஷாஜகானுக்கு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றதன் மூலம் தமிழக அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதித்துவம் மேலும் வலுப்பெற்றுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P