வாக்குப்பதிவு நாளன்று தாக்குதல் - முன்னாள் அமைச்சர் சேகர் பாபு உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னை, 22 மே (ஹி.ச.) வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சினோரா அசோக் மற்றும் வழக்கறிஞர் விஜயகுமார் ஆகியோரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வடக
வாக்குப்பதிவு நாளன்று தாக்குதல் - முன்னாள் அமைச்சர் சேகர் பாபு உட்பட 4 பேர் மீது  வழக்குப்பதிவு


சென்னை, 22 மே (ஹி.ச.)

வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சினோரா அசோக் மற்றும் வழக்கறிஞர் விஜயகுமார் ஆகியோரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மீது புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையை தொடர்ந்து, சேகர் பாபு உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள 4 பிரிவுகள் குறித்த முழு விவரங்களை காவல்துறை இதுவரை வெளியிடவில்லை. தாக்குதல், கொலை மிரட்டல், அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளது.

வாக்குச்சாவடி பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்ய உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / vidya.b