வியாபாரிகள் சங்க தலைவரை வெட்ட முயற்சி - போலீஸ் விசாரணை
புதுக்கோட்டை, 22 மே (ஹி.ச.) புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் வியாபாரிகள் சங்க தலைவராக பாண்டி செயல்பட்டு வருகிறார். அதேபோல் “அம்மா பாண்டி” என்பவர் ஆட்டோ கன்சல்டிங் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் ராகவன் என்பவர் ரூ.50 ஆயிரம் கொடுத்து
கொலை


புதுக்கோட்டை, 22 மே (ஹி.ச.)

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் வியாபாரிகள் சங்க தலைவராக பாண்டி செயல்பட்டு வருகிறார். அதேபோல் “அம்மா பாண்டி” என்பவர் ஆட்டோ கன்சல்டிங் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் ராகவன் என்பவர் ரூ.50 ஆயிரம் கொடுத்து, அம்மா பாண்டியிடம் இரண்டாம் கை இருசக்கர வாகனம் வாங்கியதாக கூறப்படுகிறது.

ஆனால் வாங்கிய சில நாட்களிலேயே வாகனம் பழுதானதால், ராகவன் கடைக்கு சென்று கேள்வி எழுப்பி வாகனத்தையும் ஒப்படைத்துள்ளார்.

அதற்கு அம்மா பாண்டி ரூ.20 ஆயிரம் மட்டும் கொடுத்து, மீதித் தொகையை பின்னர் தருவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களாகியும் மீதிப்பணம் வழங்கப்படாததால், வியாபாரிகள் சங்க தலைவர் பாண்டியை பேச்சுவார்த்தைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது பேச்சுவார்த்தை தகராறாக மாறிய நிலையில், அம்மா பாண்டியின் ஆதரவாளர்கள் கத்தியை எடுத்து கொண்டு பாண்டியை வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam