ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் வெற்றி சென்னை அணி வெளியேற்றம் – ரசிகர்கள் சோகம்
ஆமதாபாத் , 22 மே (ஹி.ச.) 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் முக்கிய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் அணியிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. ஆமதாபாத்தில் நடைபெற்ற 66-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்
I


ஆமதாபாத் , 22 மே (ஹி.ச.)

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் முக்கிய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் அணியிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

ஆமதாபாத்தில் நடைபெற்ற 66-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணிக்கு கில் – சாய் சுதர்ஷன் இணை சிறப்பான தொடக்கத்தை அளித்தது.

அதிரடி ஆட்டத்தில் கில் 37 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார்.

சாய் சுதர்ஷன் 53 பந்துகளில் 84 ரன்கள் குவித்து அணியின் ரன் வேகத்தை உயர்த்தினார்.

பின்னர் பட்லர் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம் குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது.

230 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி தொடக்கத்திலேயே சரிவை சந்தித்தது. முக்கிய வீரர்கள் விரைவில் அவுட் ஆனதால் அணிக்கு மீள வாய்ப்பு கிடைக்கவில்லை. அதிகபட்சமாக டுபே 47 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் சென்னை அணி 13.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்களில் சுருண்டது. இதனால் குஜராத் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியால் குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறி பிளே-ஆப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில் சென்னை அணி தொடரிலிருந்து வெளியேறியதால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA