Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 22 மே (ஹி.ச.)
சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதில் திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமைப்பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா இன்று காலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிட்டு பள்ளியறை திறக்கப்பட்டு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை நடைபெற்றது.தொ
டர்ந்து கொடிப்பட்டம் பதியை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கொடிமரத்தை ஐந்து முறை வலம் வந்து கொடியேற்றம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திரளான அய்யாவழி பக்தர்கள் தலைப்பாகை அணிந்து கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு நெற்றித்தட்டு திருநாமம் இடப்பட்டு இனிமம் வழங்கப்பட்டது.
திருவிழா நாட்களில் தினமும் அய்யாவுக்கு சிறப்பு பணிவிடைகள், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
வரும் 29-ம் தேதி நடைபெறும் 8-ம் திருவிழாவில் அய்யா வெள்ளைக் குதிரை வாகனத்தில் முத்திரிக்கிணறு கரையில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.தொ
டர்ந்து பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
முக்கிய நிகழ்வான 11-ம் நாள் திருவிழா தேரோட்டம் ஜூன் 1-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam