Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 மே (ஹி.ச.)
சென்னையில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் மின்தடை அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் நேற்று இரவு கொளத்தூரில் கடுமையான மின் தடை ஏற்பட்டது.
கொளத்தூர் ராஜமங்கலம் காவல் நிலைய த்துக்கு உட்பட்ட 200 அடி சாலையில் புழல் கடப்பா பகுதி மற்றும் ரேவதி நகர் பகுதி யில் நேற்று இரவு எட்டு மணி முதல் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அதன் பிறகு தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படாததால் நள்ளிரவு இரண்டு மணிக்கு அப்பகுதி மக்கள் செந்தில் நகர் போலீஸ் பூத் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பெண் கள், குழந்தைகள் என பலரும் சாலையில் வந்து அமர்ந்து சாலை மறியல் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத் திற்கு வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது.
இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் அப்பகுதி வழியாக அதிக அளவில் செல் வது வழக்கம். நள்ளிரவில் திடீரென பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முடியாமல் திணறினர்.
ராஜமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை சமாதானம் செய்ய முயற்சி செய்தனர்.
ஆனால் பொதுமக்கள் மின்வாரிய ஊழியர்கள் வந்து பிரச்சனை யை சரி செய்தால் மட்டுமே இங்கிருந்து கிளம்பி செல்வோம் என்று கூறினர்.
இதனால் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைத்து அவசர அவசரமாக மின் பிரச்சனை சரி செய்யப்பட்டது.
அதன் பிறகு நள்ளிரவு 2:30 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam