எம்எல்ஏவுடன் வாக்குவாதம் - ராயபுரம் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
சென்னை, 22 மே (ஹி.ச.) சென்னை ராயபுரம் பகுதியில் இளம் பெண் ஒருவர், காதலித்து ஏமாற்றப்பட்டதாகக் கூறி திருமண மண்டபத்திற்கு ஆதரவாளர்களுடன் சென்று நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரா
ஆய்வாளர்


சென்னை, 22 மே (ஹி.ச.)

சென்னை ராயபுரம் பகுதியில் இளம் பெண் ஒருவர், காதலித்து ஏமாற்றப்பட்டதாகக் கூறி திருமண மண்டபத்திற்கு ஆதரவாளர்களுடன் சென்று நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராயபுரம் காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணிடமும், அவருக்கு ஆதரவாக வந்த சமூக ஆர்வலரான மற்றொரு பெண்ணிடமும் மரியாதை குறைவாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், “யூனிபார்மை கழட்டினால் உனது தலை இருக்காது” உள்ளிட்ட வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும், கலீல் அகமது என்பவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, ராயபுரம் காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்ற ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமு, பொதுமக்களை தாக்கும் உரிமையை யார் கொடுத்தது, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என கேள்வி எழுப்பிய நிலையில், காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இருவருக்கும் இடையேயான வார்த்தைப் போர் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில், பெண்களிடம் மரியாதை குறைவாக பேசியதாக வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் ராயபுரம் காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P