Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 22 மே (ஹி.ச.)
கோவை மாவட்ட காவல் துறையில், அதிநவீன வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள “மாஸ்டர் கமாண்ட் மற்றும் கண்ட்ரோல் சென்டர் (MCCC)” கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் திறந்து வைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்து உள்ளது.
கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் (IG) திருமதி. ரம்யா பாரதி, கோவை சரக காவல் துணை தலைவர் (DIG) சாமிநாதன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) டாக்டர் K. கார்த்திகேயன், IPS, மற்றும் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், IAS, உள்ளிட்ட கலந்து கொண்டனர்.
கோவை மாவட்ட காவல் அலுவலகத்தின் 4-வது மாடியில், சுமார் 3,000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு உள்ள இந்த கட்டுப்பாட்டு மையம், 24 மணி நேரமும் ரவுண்ட் தி க்ளாக் முறையில் இயங்கும் வகையில் வடிவு அமைக்கப்பட்டு செய்யப்பட்டு உள்ளது.
இந்த மையத்தின் பிரதான ஈர்ப்பான மத்திய எல்.இ.டி (LED) வீடியோ வால் மற்றும் அட்வான்ஸ்டு கண்காணிப்பு சாப்ட்வேர்கள் மூலம், மாவட்டம் முழுவதும் உள்ள மிக முக்கியப் பகுதிகள் மற்றும் எல்லைப் பாதுகாப்புச் சாவடிகளில் பொருத்தப்பட்டு உள்ள CCTV மற்றும் அதிநவீன ANPR (Automatic Number Plate Recognition) கேமராக்கள் நேரடியாக இந்த ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்கப்பட உள்ளன.
குற்றவாளிகளின் நடமாட்டத்தை நொடிப் பொழுதில் கண்டறியும் இந்த டெக்னாலஜி மூலம் இனி கோவை மாவட்டத்தில் குற்றச் சம்பவங்கள் பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காவல்துறையின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் டிஜிட்டல் மயமாக்கும் இந்த புராஜெக்ட்டில், மாவட்டம் முழுவதும் உள்ள 1500-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி கேமராக்கள், அனைத்து காவல் நிலையங்களின் கண்காணிப்பு வெப்கேம்கள், 'டயல்-100' அவசர உதவி சேவை ஆகியவை இந்த ஒரே கமாண்ட் சென்டருடன் இணைக்கப்பட்டு உள்ளன.
இதுமட்டுமன்றி, களத்தில் இருக்கும் போலீஸாரைக் கண்காணிக்கும் Kakki beat, Smart Kavalar செயலிகள், சோஷியல் மீடியா கண்காணிப்புப் பிரிவு, சைபர் கிரைம், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (NDPS) எனப் பல முக்கியப் பிரிவுகள் இந்த சிங்கிள் விண்டோ சிஸ்டத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டு, மாவட்ட எஸ்.பி யின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது.
பொதுமக்களின் அவசரப் புகார்களுக்குப் விரைவான நடவடிக்கை எடுக்கவும், காவல் துறையின் செயல்பாடுகளில் 100 விழுக்காடு வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வரவும் இந்தத் தொழில்நுட்பம் உதவும் எனத் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
முழுக்க முழுக்க டிஜிட்டல் சான்றுகளின் அடிப்படையில் மிகத் துல்லியமாகவும், அதே சமயம் பொதுமக்களுக்கு மிகவும் இணக்கமான ஒரு ‘மக்கள் நட்பு’ காவல் சேவையை வழங்குவதே இந்த மாஸ்டர் கமாண்ட் மற்றும் கண்ட்ரோல் சென்டர் அமைக்கப்பட்டதன் முதன்மை நோக்கம் என கோவை மாவட்ட காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b