தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளில் சோதனை நடத்த கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர்.டிகே. பிரபு உத்தரவு
சென்னை, 22 மே (ஹி.ச.) தமிழகம் முழுவதும் கனிமவளத் துறை சார்பில் 3000-க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில் அனுமதி அளிக்கப்பட்டு கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. இந்த கல்குவாரிகளில் அரசு அளித்த அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக பல்வேறு புகார்க
Prabhu


சென்னை, 22 மே (ஹி.ச.)

தமிழகம் முழுவதும் கனிமவளத் துறை சார்பில் 3000-க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில் அனுமதி அளிக்கப்பட்டு கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது.

இந்த கல்குவாரிகளில் அரசு அளித்த அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. அதே போல, மத்திய அரசின் சிபா கமிட்டி கல்குவாரிகளில் எந்த அளவு கற்கள் எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக பல்வேறு விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் பல இடங்களில் மீறப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதே போல, கல்குவாரிகளை கண்காணிக்கும் சேப்டி மைண்ட் எனப்படும் கண்காணிப்பு குழுவினர் முறையாக கல்குவாரிகளின் கண்காணிக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இருக்கின்ற அனைத்து கல்வாரிகளிலும் அந்தந்த மாவட்ட கனிமவளத்துறையினர் ஆய்வு செய்து கல்குவாரிகளில் அரசிடம் வெட்டியெடுக்கப்பட்டுள்ளதா? பெறப்பட்ட ஆணைப்படி கற்கள் அளவுக்கு அதிகமாக எடுக்கப்பட்டுள்ளதா? என்பதை உடனடியாக ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உத்தரவிட்டிருக்கிறார்.

அரசு உத்தரவு இல்லாமல் பல இடங்களில் சட்டவிரோதமாக கல்குவாரிகள் செயல்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளன. அனைத்து கல்குவாரிகளையும் ஆய்வு செய்து எந்த அளவிற்கு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகள் எத்தனை உட்பட பல்வேறு விவரங்களை உடனடியாக திரட்ட கனிமவளத் துறையினருக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

அரசு விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக கற்களை வெட்டி எடுத்த கல்குவாரிகளை உடனடியாக மூடவும். அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதற்காக அபராதம் வசூலிக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ