அமைச்சர்களாக பொறுப்பேற்ற வி.சி.க மற்றும் ஐயூஎம்எல் நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை, 22 மே (ஹி.ச) தமிழகத்தின் புதிதாக அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள வன்னி அரசு மற்றும் ஷாஜஹான் ஆகியோருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில், வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பே
Mks


Hh


சென்னை, 22 மே (ஹி.ச)

தமிழகத்தின் புதிதாக அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள வன்னி அரசு மற்றும் ஷாஜஹான் ஆகியோருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில், வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில்,

மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. வன்னி அரசுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம்.

நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ