17 வயது சிறுவனை வெட்டி கொன்ற மர்ம கும்பல்
புதுக்கோட்டை, 22 மே (ஹி.ச.) புதுக்கோட்டை மாவட்டம் பெருமாநாடு பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் அன்புசெல்வன்(17), கடந்த 2024ஆம் ஆண்டு கூலி வேலைக்கு சென்றபோது ஏற்பட்ட சம்பளத் தகராறில் தனது தாய் மாமன் முருகானந்தத்துடன் சேர்ந்து அதே பகுதியை
கொலை


புதுக்கோட்டை, 22 மே (ஹி.ச.)

புதுக்கோட்டை மாவட்டம்

பெருமாநாடு பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் அன்புசெல்வன்(17), கடந்த 2024ஆம் ஆண்டு கூலி வேலைக்கு சென்றபோது ஏற்பட்ட சம்பளத் தகராறில் தனது தாய் மாமன் முருகானந்தத்துடன் சேர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த சத்யராஜை தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படும் வழக்கில் தொடர்புடையவராக இருந்தார்.

இந்த வழக்கில் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக இருந்த நிலையில், ஓசூரில் இருந்து நேற்று பெருமாநாட்டிற்கு வந்திருந்த அன்புசெல்வனை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையில் தொடர்புடைய மர்ம நபர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam