குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் முயல் வளர்ப்பு முறை
தமிழ்நாடு, 22 மே (ஹி.ச.) முயல் வளர்ப்பு என்பது குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் சிறந்த தொழிலாகும். நல்ல காற்றோட்டமான கூண்டுகள் அமைத்து, தரமான அடர் தீவனம் மற்றும் பசுந்தீவனம் வழங்கி, முறையான இனப்பெருக்க சுழற்சியைப் பின்பற்றுவதன் மூலம் ஆரோக்கி
க


தமிழ்நாடு, 22 மே (ஹி.ச.)

முயல் வளர்ப்பு என்பது குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் சிறந்த தொழிலாகும்.

நல்ல காற்றோட்டமான கூண்டுகள் அமைத்து, தரமான அடர் தீவனம் மற்றும் பசுந்தீவனம் வழங்கி, முறையான இனப்பெருக்க சுழற்சியைப் பின்பற்றுவதன் மூலம் ஆரோக்கியமான முயல்களை எளிதாக வளர்க்கலாம்.

இனப்பெருக்க மேலாண்மைஇனச்சேர்க்கை வயது:

முயல்கள் 5 முதல் 7 மாத வயதில் இனப்பெருக்கத்திற்குத் தயாராகின்றன.

முறை:

பெண் முயலை ஆண் முயலின் கூண்டிற்குச் அழைத்துச் சென்று இணை சேர்க்க வேண்டும்.

சினைக்காலம்:

முயலின் சினைக்காலம் (கர்ப்ப காலம்) 28 முதல் 32 நாட்கள் ஆகும்.

குட்டிகள்:

ஒரு பெண் முயல் வருடத்திற்கு 6 முதல் 8 முறை குட்டி ஈனும். ஒவ்வொரு முறையும் 5 முதல் 8 குட்டிகள் வரை கிடைக்கும்.

குட்டி ஈன்ற 45 நாட்களுக்குப் பிறகே மீண்டும் இணை சேர்க்க வேண்டும்.கூண்டு அமைப்பு முயல்களை தரைப்பகுதியில் வளர்க்காமல், தரையிலிருந்து 2-3 அடி உயரத்தில் கம்பி வலைக் கூண்டுகளில் வளர்ப்பது சிறந்தது.கூண்டுகளில் சுத்தமான குடிநீர் மற்றும் தீவனத் தொட்டிகள் இருக்க வேண்டும்.

சினைப் பருவத்தில் உள்ள பெண் முயல்களுக்கு பிரசவத்திற்காக வைக்கோல் அல்லது தேங்காய் நார் நிரப்பப்பட்ட வலைப்பெட்டிகளை கூண்டில் வைக்க வேண்டும்.

அடர் தீவனம்:

சோயா பீன்ஸ் பிண்ணாக்கு, கடலை பிண்ணாக்கு, கோதுமைத் தவிடு போன்ற அடர் தீவனங்களை தினமும் 120 கிராம் வரை பிரித்துக் கொடுக்க வேண்டும்.

பசுந்தீவனம்:

முருங்கை இலை, அகத்தி கீரை, சப்-பாபுல் மற்றும் கொய்யா இலைகள் முயல்களுக்கு நல்ல உணவாகும்

Hindusthan Samachar / Durai.J