ஆ.ராசா பதிவு அநாகரீகத்தின் உச்சம் - தமிழக வெற்றிக் கழகம் விமர்சனம்
சென்னை, 22 மே (ஹி.ச.) விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சிகளின் நிலைப்பாடுகளை கொச்சைப்படுத்தும் வகையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தனது சமூக வலைதளப் பதிவில் கருத்து தெரிவித்துள்ளதாக தமிழக வ
தவெக


சென்னை, 22 மே (ஹி.ச.)

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சிகளின் நிலைப்பாடுகளை கொச்சைப்படுத்தும் வகையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தனது சமூக வலைதளப் பதிவில் கருத்து தெரிவித்துள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள பதிவில்,

“அதிகார பகிர்வு” என்ற மக்களாட்சிக் கோட்பாடு தொடர்பாக மாற்று அரசியல் கருத்துகளையோ, உரிமைகளையோ முன்வைக்கும் சமூக நீதி சார்ந்த கட்சிகளை தரம் தாழ்ந்து விமர்சிப்பதும், மிரட்டும் தொனியில் பேசுவதும் திமுகவின் அதிகார மமதையையே வெளிப்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், தமிழக வெற்றிக் கழகம் முன்வைக்கும் அனைவரையும் உள்ளடக்கிய அதிகாரப் பகிர்வு என்ற அரசியல் தத்துவம், திமுகவின் குடும்ப அரசியல் ஏகபோகத்திற்கு சவாலாக அமையும் என்ற அச்சத்திலேயே அக்கட்சியினர் நிதானம் இழந்து கருத்து தெரிவித்து வருவதாகவும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

“உங்கள் சுயரூபத்தை நீங்களே வெளிப்படுத்தி விட்டீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆ.ராசாவின் பதிவு தார்மீக அரசியல் நாகரிக எல்லைகளை மீறியுள்ளதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P