அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள வன்னி அரசு, ஷாஜகான் இருவருக்கும் பெ.சண்முகம் வாழ்த்து
தமிழ்நாடு, 22 மே (ஹி.ச.) தமிழக அமைச்சரவையில் இன்று புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள தோழர்கள் வன்னி அரசு மற்றும் ஷாஜகான் ஆகியோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வ
பெ.சண்முகம்


தமிழ்நாடு, 22 மே (ஹி.ச.)

தமிழக அமைச்சரவையில் இன்று புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள தோழர்கள் வன்னி அரசு மற்றும் ஷாஜகான் ஆகியோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

சமூக நீதி, மதச்சார்பின்மை மற்றும் மக்கள் நலக் கொள்கைகளை முன்னிறுத்தி புதிய அமைச்சர்கள் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இருவரும் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

தமிழக அரசியலில் கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவைப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், வன்னி அரசு மற்றும் ஷாஜகான் ஆகியோரின் பதவியேற்பு அரசியல் வட்டாரங்களில் முக்கிய கவனத்தை பெற்றுள்ளது.

இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட கூட்டணி தரப்பினரும் இந்த நியமனத்தை வரவேற்று வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam