தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிப்பு
புதுடெல்லி, 22 மே (ஹி.ச.) தமிழ்நாட்டில் காலியாகவுள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கான இடைத்தேர்தல் ஜூன் 18 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெ
க


புதுடெல்லி, 22 மே (ஹி.ச.)

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கான இடைத்தேர்தல் ஜூன் 18 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுகவின் சி.வி. சண்முகம், தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், காலியானதாக அறிவிக்கப்பட்ட தமிழ்நாட்டின் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஜூன் 18 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 1 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. ஜூன் 11 வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாளாகும்.

ஒருவருக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில், ஜூன் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அந்த கட்சி சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளரே மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P