திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் முதலமைச்சர் விஜயை சந்தித்து 10 கோரிக்கைகள் வைத்தனர்
சென்னை, 22 மே (ஹி.ச) தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை சந்தித்து திரையரங்கு துறை சார்ந்த 10 முக்கிய கோரிக்கைகளை முன்வை
Theatre


சென்னை, 22 மே (ஹி.ச)

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை சந்தித்து திரையரங்கு துறை சார்ந்த 10 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

அதில் முக்கியமாக, திரைப்படங்களுக்கான டிக்கெட் கட்டணத்தை ரூ.250 ஆக நிர்ணயிக்க வேண்டும் என்றும், அதற்குள் திரைப்படத்தின் தன்மை மற்றும் வசதிகளுக்கு ஏற்ப திரையரங்க உரிமையாளர்கள் கட்டணத்தை மாற்றிக் கொள்ளும் வகையில் ‘Flexible Rate’ முறைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் தற்போதுள்ள ரூ.188 டிக்கெட் கட்டணத்தை ரூ.200 ஆக உயர்த்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

திரைப்படங்களுக்கு விதிக்கப்படும் உள்ளூர் பொழுதுபோக்கு வரியை ரத்து செய்ய வேண்டும், திரையரங்குகளை புதுப்பிப்பதற்கான ‘C Form’ அனுமதியை எளிதாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் மனுவில் இடம்பெற்றுள்ளன.

திரையரங்கு துறையின் தற்போதைய நிலை, பராமரிப்பு செலவுகள் மற்றும் பார்வையாளர்களுக்கு மேம்பட்ட வசதிகளை வழங்க தேவையான ஆதரவு குறித்து முதலமைச்சரிடம் நிர்வாகிகள் விளக்கமளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ