முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்ற பால்வளத் துறை அமைச்சர் விஜயலட்சுமி
சென்னை, 22 மே (ஹி.ச.) தமிழகத்தில் புதிய அமைச்சரவை விரிவாக்கத்திற்குப் பிறகு, பால்வளத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜயலட்சுமி, முதலமைச்சர் ஜோசப் விஜய்யை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின் போது
விஜய்


சென்னை, 22 மே (ஹி.ச.)

தமிழகத்தில் புதிய அமைச்சரவை விரிவாக்கத்திற்குப் பிறகு, பால்வளத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜயலட்சுமி, முதலமைச்சர் ஜோசப் விஜய்யை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்த சந்திப்பின் போது, அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்த விஜயலட்சுமி, பால்வளத் துறையில் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் நலனை முன்னிறுத்தி பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக ஆவின் நிறுவனத்தின் சேவைகளை கிராமப்புறங்களிலும் விரிவுபடுத்துவது, பால் கொள்முதல் விலையை மேம்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலமைச்சர் ஜோசப் விஜய், பொதுமக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் துறை சார்ந்த பணிகளை வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

புதிய அமைச்சர்களை தொடர்ந்து சந்தித்து வாழ்த்து தெரிவித்து வரும் முதலமைச்சர், அமைச்சரவையின் செயல்திறனை மக்கள் மையப்படுத்தி முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தி வருகிறார்.

விஜயலட்சுமியின் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களிலும், பால்வளத் துறை ஊழியர்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam