Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 22 மே (ஹி.ச.)
தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ள நிலையில், கட்சித் தலைவர் திருமாவளவன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேர்தலின்போது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விசிகவை இணைத்துக் கொண்டு வெற்றிக்காக செயல்பட்ட கூட்டணி கட்சிகளுக்கு எங்களது நன்றிகள். குறிப்பாக ஆட்சியில் அதிகாரப் பகிர்வு வழங்கிய முதலமைச்சர் விஜய்க்கு மனமார்ந்த நன்றி, என தெரிவித்துள்ளார்.
மேலும், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு” என்ற முழக்கத்துடன் நீண்டகாலமாக போராடி வந்த விடுதலை சிறுத்தைகளுக்கு தற்போது அரசில் உரிய இடம் கிடைத்துள்ளது.
இது எங்கள் அரசியல் பயணத்தின் முக்கியமான வெற்றியாகும். விடுதலை சிறுத்தைகளின் கனவு இன்று நனவாகியுள்ளது,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவை பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள சூழலில், திருமாவளவனின் இந்த கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கூட்டணி அரசியலில் அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி வந்த விசிகவின் நிலைப்பாடு தற்போது நடைமுறையில் வெளிப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam