விசிக வன்னி அரசு, முஸ்லிம் லீக் ஷாஜஹான் இன்று அமைச்சர்களாக பதவியேற்பு
சென்னை, 22 மே (ஹி.ச.) முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி முதலமைச்சர் விஜய் உள்பட 33 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். இன்னும் 2 அமைச்சர்கள் அதில் இடம்பெற வாய்ப்பு உள்ளது. ஆதி திராவிடர
விசிக வன்னி அரசு, முஸ்லிம் லீக் ஷாஜஹான் இன்று அமைச்சர்களாக பதவியேற்பு


சென்னை, 22 மே (ஹி.ச.)

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது.

அதன்படி முதலமைச்சர் விஜய் உள்பட 33 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

இன்னும் 2 அமைச்சர்கள் அதில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

ஆதி திராவிடர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய துறைகளுக்கு மட்டும் இன்னும் அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை.

அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் தலா ஒரு இடத்தை வழங்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளார்.

எனவே கவர்னர் மாளிகையில் இந்த 2 அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி இன்று (மே 22) காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் ஷாஜகான், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னி அரசும் அமைச்சர்களாக இன்று பதவியேற்கிறார்கள்.

சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் வன்னி அரசு மற்றும் ஷாஜஹானுக்கு ஆளுநர் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

இதன் மூலம் முதல்முறையாக தமிழக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விசிக அதிகாரம் பெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b