Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 22 மே (ஹி.ச.)
பாண்டிச்சேரியில் இருந்து புறப்பட்ட இந்த சிறப்பு ரயில் திருவண்ணாமலை – போளூர் வழியாக சென்று கொண்டிருந்தபோது, ஆரணி அருகே ஒண்ணுபுரம் பகுதியில் திடீரென நிறுத்தப்பட்டது.
அப்போது ரயிலில் பயணம் செய்த ஒருவர் திடீரென கீழிறங்கி, ரயில் மற்றும் அதில் இருந்த பயணிகள் மீது கற்களை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் ஹௌரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 20 நிமிடங்கள் ஒண்ணுபுரம் பகுதியில் நின்றது.
பின்னர் காலதாமதத்திற்கு பின் ரயில் மீண்டும் புறப்பட்டது.
கல் வீச்சில் ஈடுபட்ட நபர் பின்னர் மீண்டும் அதே ரயிலில் ஏறி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து பயணிகள், ரயிலை இயக்கி வந்த லோகோ பைலட்டிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் லோகோ பைலட், இந்தியன் ரயில்வேயை சார்ந்த காட்பாடி ரயில்வே போலீசாரிடம் புகார் செய்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில்,
சம்பவத்தில் தொடர்புடையவர் தர்மபுரியை சேர்ந்த ஜோசப்மணி என்பதும், அவர் தனியார் பேக்கரியில் பணிபுரிவதும் தெரியவந்தது.
மேலும் அவர் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறியதாகவும் கூறப்படுகிறது.
எனக்கு விஜய் அண்ணாவை மிகவும் பிடிக்கும்.
அவரை யார் திட்டினாலும் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று கூறிய அவர், விஜயின் பெயரை கை மற்றும் கழுத்தில் பச்சைக் குத்தியிருப்பதையும் காட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.
மற்ற பயணிகள் அளித்த தகவலில், அந்த நபர் ரயிலில் ஏறியதிலிருந்து தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆபாசமாக பேசியதாகவும், இதனால் பயணிகள் ஒன்றிணைந்து ரயிலை நிறுத்தியதாகவும் கூறியுள்ளனர். அதற்கு ஆத்திரமடைந்த அவர் கற்களை வீசி தாக்கியதாகவும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காட்பாடி ரயில்வே போலீசார் ஜோசப்மணியை தேடி வருகின்றனர்.
ஆரணி அருகே நடந்த இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Hindusthan Samachar / GOKILA arumugam