செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவர்கள் ஜூன் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
செங்கல்பட்டு, 22 மே (ஹி.ச.) அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் (ITI) என்பது பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழிற்கல்வியை வழங்கும் மையங்களாகும். இந்திய அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும்
செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவர்கள் ஜூன் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


செங்கல்பட்டு, 22 மே (ஹி.ச.)

அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் (ITI) என்பது பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழிற்கல்வியை வழங்கும் மையங்களாகும்.

இந்திய அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் இந்த நிலையங்களில், எலெக்ட்ரிசியன், பிட்டர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் போன்ற பல்வேறு தொழிற்பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில், மாணவர் சேர்க்கை தொடங்கி, நடைபெற்று வருகிறது.

அதே போல் செங்கல்பட்டு மாவட்டத்தில், உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில், அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. இங்கு, மாணவர் சேர்க்கை கடந்த 16ம் தேதி தொடங்கி நடந்து வரும் நிலையில், வரும் ஜூன் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர், www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு 94990 55673 - 99629 86696 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b