Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 மே (ஹி.ச.)
சென்னையில் இன்று (மே 23) சனிக்கிழமை காட்டாங்கொளத்தூர் பணிமனையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் தனி எஞ்சின் இல்லாமல் ரயிலின் பல பெட்டிகளிலேயே மோட்டார்கள் பொருத்தப்பட்டு இயக்கப்படும் 8 'இமு' ரயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
சென்னை ரயில்வே கோட்டம் எழும்பூர் - விழுப்புரம் இடையே காட்டாங்கொளத்தூர் பணிமனையில் தண்டவாளம், தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் இன்று (மே 23) பகல் 11.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
இதன் காரணமாக, பகல் 11.40, நண்பகல் 12.28, 12.40, பிற்பகல் 1.56 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரையிலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டு செல்லவேண்டிய 'இமு' ரயில்கள், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் வரையே இயக்கப்படும்.
இதேபோல, மறுமார்க்கத்தில் நண்பகல் 12 மணி, பிற்பகல் 1.10, 1.45, 2.20 ஆகிய நேரங்களில் செங்கல்பட்டிலிருந்து புறப்பட வேண்டிய ரயில்கள், தாம்பரத்திலிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரை நிலையம் வந்து சேரும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b