Enter your Email Address to subscribe to our newsletters

கடப்பா , 23 மே (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ராயலசீமா பகுதியில் ரூ.3,000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட 600 மெகாவாட் திறன் கொண்ட மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி திட்டம் தொடங்கப்பட்டது.
கடப்பா மாவட்டம், ஜம்மலமடுகு தொகுதி, கொண்டாபுரம் மண்டலத்தின் டி.கொண்டூர் கிராமத்தில் சுக் பீர் ஆக்ரோ எனர்ஜி லிமிடெட் நிறுவனம் அமைத்த இந்த திட்டத்தை மாநில ஐடி மற்றும் தொழில்துறை அமைச்சர் லோகேஷ் திறந்து வைத்தார்.
இந்த திட்டம் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:-
வணிக நடவடிக்கைகளின் வேகம் மற்றும் செயலாக்கத்தின் வேகம் ஆகிய இரண்டும் இணைந்த மாநிலம் ஆந்திரப் பிரதேசம் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். ராயலசீமாவில் எஸ் ஏ இ எல் நிறுவனம் அமைத்த 600 மெகாவாட் சோலார் திட்டத்தை இன்று மக்களுக்கு அர்ப்பணித்துள்ளோம்.
ரூ.3,000 கோடி முதலீட்டில் வெறும் 11 மாதங்களில் இந்த திட்டம் நிறைவு பெற்றுள்ளது. இது நிலையான எதிர்காலத்திற்கான எங்கள் உறுதியின் சான்றாகும்.
இந்தியாவின் சுத்தமான எரிசக்தி பயணத்தில் ஆந்திரப் பிரதேசம் முன்னிலையில் இருப்பதை இது உறுதிப்படுத்துகிறது.
இந்த திட்டத்தை குறுகிய காலத்தில் நிறைவு செய்த சேல் இந்தியா குழுவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.
இந்த திட்டம் மூலம் மக்களுக்கு வேலைவாய்ப்புகள், வளர்ச்சி மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்றார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA