Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 23 மே (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேசத்தில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய “டூரிஸ்ட் போலீஸ்” அமைப்பை உருவாக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.
இது குறித்து
துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்ததாவது,
மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்குவது அரசின் முக்கிய குறிக்கோள் ஆகும்.
இதற்காக “டூரிஸ்ட் போலீஸ்” அமைப்பை உருவாக்குவது குறித்து விரைவில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
முன்னாள் ஆட்சிக் காலத்தில் 20 இடங்களில் டூரிஸ்ட் போலீஸ் அவுட்போஸ்ட்கள் தொடங்கப்பட்டிருந்தன.
இதனை மேலும் விரிவுபடுத்தும் நோக்கத்துடன் புதிய திட்டம் வகுக்கப்படுகிறது.
அடைவனத்துறை, சுற்றுலாத்துறை, பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி துறைகள் இணைந்து மாநிலத்தின் முக்கியமான சுற்றுலா தலங்களை அடையாளம் காண வேண்டும்.
சுமார் 200 இடங்களைத் தேர்வு செய்து, அங்குள்ள வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து 5 நாட்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
எகோ டூரிசம் வளர்ச்சிக்கு மாநிலத்தில் பெரிய வாய்ப்புகள் உள்ளன. சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த அனுபவம் வழங்கப்பட்டால், மாநிலம் சுற்றுலா மையமாக உயர்ந்த நிலையை அடையும்.
மேலும், கிராமப்புறங்களில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சில பகுதிகளை முன்மாதிரி திட்டங்களாக தேர்வு செய்து மேம்படுத்தினால், அந்த கிராமங்களின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.
சுற்றுலா துறை வளர்ச்சியால் சுமார் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கும் பாதுகாப்பு வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கர்னூல் மாவட்டத்தில் கருப்பு மான், நல்லமலை பகுதியில் இயற்கை வளங்கள், நெல்லூர் மாவட்டத்தில் ஃபிளாமிங்கோ பறவைகள் தங்கும் மையங்கள் போன்ற சிறப்பு இடங்களை சர்வதேச தரத்தில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்படும் 200 சுற்றுலா தலங்களை இணைத்து “டூரிசம் சர்க்யூட்” அமைத்து, பயணிகளுக்கான வழிகாட்டி தகவல்களை வழங்கும் மொபைல் செயலி உருவாக்கப்படும்.
ஜூன் 10க்குள் சம்பந்தப்பட்ட துறைகள் இணைந்து ஒப்பந்தம் செய்து செயல்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பவன் கல்யாண் கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA