ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்தபோது விசாரணை ஏன் இல்லை? - ஜெகன் மீது சோமி ரெட்டி கடும் தாக்கு
அமராவதி , 23 மே (ஹி.ச.) ஆந்திரப் பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது, தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் சோமி ரெட்டி , சந்திரமோகன் ரெட்டி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக,தெலுங்கு தேசம் பார்ட்டி (டிடிபி)
A


அமராவதி , 23 மே (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது, தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் சோமி ரெட்டி ,

சந்திரமோகன் ரெட்டி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக,தெலுங்கு தேசம் பார்ட்டி (டிடிபி) மத்திய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம் குறித்து 17 ஆண்டுகளுக்கு பிறகு ஜகன் சந்தேகம் எழுப்புவது ஆச்சரியமாக உள்ளது என்று தெரிவித்தார்.

“முதல்வராக ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தாமல் இருந்த ஜகன், தற்போது இதைப் பற்றி பேசுவது ஏன்? அப்போது விசாரணை செய்யாமல் அமைதியாக இருந்தாரா?” என்று சோமி ரெட்டி கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் கூறுகையில், அந்த காலத்தில் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அப்போது எதிர்க்கட்சியில் இருந்த சந்திரபாபு நாயுடு மீது இப்போது குற்றச்சாட்டு சுமத்துவது பொருத்தமற்றது.

அந்நாளில் சிபிஐ விசாரணையில் இது விபத்து எனத் தெளிவாக கூறப்பட்டது,” என்றார்.

(ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்) கட்சியினரே ஜகனின் இந்த கருத்துகளை கேட்டு சிரிக்கிறார்கள் என்றும் அவர் விமர்சித்தார்.

மேலும், சந்திரபாபு நாயுடு மீது எந்தவித குற்றப்பின்னணியும் இல்லை.

இதை ஜெகன் நினைவில் கொள்ள வேண்டும், என்று தெரிவித்தார்.

அதே நேரத்தில், விவேகானந்தா ரெட்டி கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத நிலையில், தற்போது இந்த விவகாரம் குறித்து பேசுவது வியப்புக்குரியது என்றும் சோமி ரெட்டி தெரிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA