Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 மே (ஹி.ச.)
தமிழ்கத்தின் பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.
அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் கட்சி எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், தேர்தல் தோல்விக்குப் பிறகு நடைபெறும் முதல் இளைஞர் அணி கூட்டம் என்பதால் இது அரசியல் வட்டாரத்தில் தனி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இளைஞர் அணி செயலாளர் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து வாக்குச்சாவடி வாரியாக ஆய்வு செய்வது, இளைஞர்களின் ஆதரவு குறைவாக பதிவான தொகுதிகளை கண்டறிந்து அலசுவது ஆகியவை கூட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இளைஞர் அணியை கட்டமைப்பு ரீதியாக வலுப்படுத்த மாவட்ட அளவில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், 2026 நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு களப்பணிகளை தீவிரப்படுத்தும் வழிமுறைகள், இளைஞர்களை ஈர்க்கும் வகையில் சமூக வலைதளங்களில் பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்கான புதிய உத்திகள் ஆகியவை குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து கட்சித் தலைமை மீதான விமர்சனங்களும், இளைஞர் அணியின் செயல்பாடுகள் குறித்த கேள்விகளும் எழுந்துள்ள சூழலில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
தோல்வியில் இருந்து பாடம் கற்று, அடுத்த தேர்தலுக்கு கட்சியை முழு வீச்சில் தயார்படுத்தும் நோக்கில் இளைஞர் அணிக்கு தெளிவான வழிகாட்டுதல் வழங்கப்படும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இன்று மாலை கூட்டம் நிறைவடைந்த பின்னர் இளைஞர் அணி செயலாளர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளிக்க வாய்ப்புள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Hindusthan Samachar / vidya.b