Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 23 மே (ஹி.ச.)
பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அலுவலக பணியாளர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் காலை 10 மணிக்குள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அலுவலக நேரத்தை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், தாமதமாக பணிக்கு வருவோர் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தாமதமாக வருபவர்களின் தாமத நேரம் விடுப்பாக கணக்கில் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து அலுவலகங்களிலும் வருகைப் பதிவேடு தீவிரமாக ஆய்வு செய்யப்படும் என்றும், பணிநேர ஒழுங்கை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறையில் அமைச்சுப் பணியாளர்களின் பணிநேரம் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை மாற்றப்பட்டிருந்த நிலையில், தற்போது நேரம் தவறாமல் அலுவலகம் வருவது குறித்து மீண்டும் கடுமையான கண்காணிப்பு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam