சென்னையில் திடீர் புழுதிக்காற்று - விமான சேவைகள் பாதிப்பு
சென்னை, 23 மே (ஹி.ச) கடந்த சில நாட்களாக சென்னையில் கடும் வெயில் வாட்டி வதைத்தது. இதனால் மக்கள் தவித்து வந்த நிலையில், இன்று காலையில் திடீரென வானிலை மாறியது. எழும்பூர், புரைசைவாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் திடீரென சூறைக்காற்று வீசியது. குறிப்பாக
Flight Services Disrupted


சென்னை, 23 மே (ஹி.ச)

கடந்த சில நாட்களாக சென்னையில் கடும் வெயில் வாட்டி வதைத்தது. இதனால் மக்கள் தவித்து வந்த நிலையில், இன்று காலையில் திடீரென வானிலை மாறியது.

எழும்பூர், புரைசைவாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் திடீரென சூறைக்காற்று வீசியது. குறிப்பாக சென்னை மெரினாவில் புழுதிக்காற்று வீசியது.

இதனால் கடற்கரை மணலில் இருந்து புழுதிகள் பறந்து புகை மண்டலமாக்கியது. வழக்கத்துக்கு மாறாக திடீரென்று வீசிய புழுதி காற்றால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

மெரினா கடற்கரைக்கு யாரும் செல்ல வேண்டாம். மெரினாவில் இருந்து உடனடியாக பொதுமக்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று கண்காணிப்பு அறையில் இருந்து எச்சரிக்கை செய்யப்பட்டது.

இந்த புழுதி காற்று காரணமாக சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து தடை விதித்துள்ளனர்.

இதற்கிடையே சென்னையில் பலத்த காற்று காரணமாக சென்னையில் இன்று விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த விமானம் பலத்த காற்றால் தரையிறங்க முடியாமல் திருப்பதிக்கு சென்றது. துபாய், அபுதாபி, வாரணாசி, டெல்லி, கொல்க்கத்தாவில் இருந்து வந்த 9 விமானங்களின் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

சில விமானங்கள் தரையிறங்க முடியாமல், வானில் வட்டமடித்து, தாமதமாக தரையிறக்கப்பட்டன.

அடுத்தடுத்து விமானங்கள் வருகை தாமதம் ஆனதால் விமான நிலையத்தில் பயணிகளை வரவேற்க காத்திருந்த உறவினர்களும் தவிப்புக்கு உள்ளாகினர்.

Hindusthan Samachar / vidya.b