Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 மே (ஹி.ச.)
மே மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.
எப்படி இருந்தாலும் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை தாண்டியே உள்ளதால் நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியாகவே தான் இருக்கிறது.
கடந்த 13ஆம் தேதி ஒரே நாளில் சவரனுக்கு தங்கம் விலை ரூ.5000க்கும் மேல் உயர்ந்து நகை பிரியர்களை திர்ச்சிக்குள்ளாக்கியது. இதை தொடர்ந்து கடந்த மே 16ஆம் தேதி தங்கம் விலை கணிசமாக குறைந்தது.
அதன் பிறகு ஏற்ற இறக்கமாக இருந்த தங்கம் விலை நேற்று ( மே 22) தங்கம் விலை கணிசமாக குறைந்தது. அதன் படி கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.14,780க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.118,240க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,730க்கும் சவரனுக்கு ரூ. 400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,840க்கும் விற்பனை செய்யப்படுகின்றது...
வெள்ளி விலை மட்டும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.295க்கும், ஒரு கிலோ ரூ.2,95,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P