முதல்வருக்கு பிரிவினை பார்க்கக்கூடிய எண்ணம் கிடையாது - அமைச்சர் ரமேஷ்
திருச்சி, 23 மே (ஹி.ச.) திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்த பின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், சாதியைப் பார்த்து யாருக்கும் பதவி வழங்க
Minister Ramesh


திருச்சி, 23 மே (ஹி.ச.)

திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்த பின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

சாதியைப் பார்த்து யாருக்கும் பதவி வழங்கவில்லை. சேவை மனப்பான்மையோடு இருப்பவர்களுக்கு முதல்வர், அனைவருக்கும் அமைச்சர் உள்ளிட்ட அனைத்து பதவிகளும் வழங்கி உள்ளார்.

முதல்வருக்கு பிரிவினை பார்க்கக்கூடிய எண்ணம் கிடையாது.

இந்து சமய அறையில் முதல்கட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. கோவிலுக்கு வரக்கூடியவர்கள் எவ்வித சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்துவிட்டு செல்ல வேண்டும் என்பதை அறிவுறுத்தி உள்ளோம்.

அதிகாரிகள் மட்டுமல்ல, கடைநிலை ஊழியர்களும் நேர்மையாக செயல்பட வேண்டும். கோவில்கள் அனைத்தும் எனது நேரடி கண்காணிப்பு இருக்கும்.

அதில் எவ்வித சமரசம் இன்றி நேர்மையான முறையில் செயல்படுவேன். அதிகாரிகளை செயல்பட வைப்பேன்.

இந்து சமய அறநிலைத்துறை ஒரு சிறந்த துறை என்ற பெயரை வாங்குவேன் என்று தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN