தேராதூனில் ‘நிதி எக்ஸ்ட்ரீம் அல்ட்ரா கவுண்ட்டவுன் ஓட்டம்’ தொடக்கம் - முதல்வர் புஷ்கர் சிங் தாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
தேராதூன், 23 மே (ஹி.ச.) உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, இன்று தேராதூனில் ‘நிதி எக்ஸ்ட்ரீம் அல்ட்ரா கவுண்ட்டவுன் ஓட்டத்தை’ கொடியசைத்து தொடங்கி வைத்தார். உத்தராகண்ட் சுற்றுலா மேம்பாட்டு வாரியம் ஏற்பாடு செய்த இந்த ஓட்டம், முதல்வரின் முகா
தேராதூனில் ‘நிதி எக்ஸ்ட்ரீம் அல்ட்ரா கவுண்ட்டவுன் ஓட்டம்’ தொடக்கம் - முதல்வர் புஷ்கர் சிங் தாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்


தேராதூன், 23 மே (ஹி.ச.)

உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, இன்று தேராதூனில் ‘நிதி எக்ஸ்ட்ரீம் அல்ட்ரா கவுண்ட்டவுன் ஓட்டத்தை’ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

உத்தராகண்ட் சுற்றுலா மேம்பாட்டு வாரியம் ஏற்பாடு செய்த இந்த ஓட்டம், முதல்வரின் முகாம் அலுவலக வளாக நுழைவு வாயிலில் இருந்து தொடங்கியது.

‘நிதி எக்ஸ்ட்ரீம் அல்ட்ரா ஓட்டம்’ என்பது வெறும் நிகழ்ச்சி மட்டுமல்ல, புதிய உத்வேகம், வாய்ப்பு மற்றும் நம்பிக்கையை விழிப்பூட்டும் ஒரு இயக்கம் என்று கூறிய முதல்வர் தாமி உத்தராகண்ட் இளைஞர்களின் அர்ப்பணிப்பையும் தேசப்பற்றையும் அவர் பாராட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் தாமி கூறுகையில்,

இந்த ‘நிதி எக்ஸ்ட்ரீம் அல்ட்ரா ஓட்டம்’ வெறும் நிகழ்வு அல்ல; புதிய ஆற்றல், வாய்ப்பு மற்றும் நம்பிக்கையை எழுப்பும் பிரச்சாரம் இது. அதிகாலையில் நீங்கள் அனைவரும் இங்கு கூடியிருப்பதே, உத்தராகண்ட் இளைஞர்கள் தைரியத்துடனும் நாட்டின் மீதான உறுதியுடனும் நிறைந்துள்ளனர் என்பதை நிரூபிக்கிறது.

இந்த ஓட்டம் உங்கள் உடல் வலிமையை மட்டும் சோதிப்பதில்லை; உங்கள் மன உறுதி, பொறுமை மற்றும் தன்னம்பிக்கையை பலப்படுத்துகிறது. நிதி பள்ளத்தாக்கு போன்ற தொலைதூர, கடினமான நிலப்பரப்பில் ஓடுவது எல்லோராலும் முடியாத காரியம். அதற்கு உள்ளார்ந்த தன்னம்பிக்கை தேவை – இமயமலை போன்ற அசைக்க முடியாத மனவலிமையும், சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் தைரியமும் வேண்டும்.

இந்த ‘தேவபூமியை’ அனைத்து துறைகளிலும் முன்னோக்கி கொண்டு செல்ல விரும்பும் உத்வேகமும் உறுதியும் கொண்ட இளைஞர்களாகிய உங்களை இன்று என் முன் காண்பதில் பெருமை கொள்கிறேன்

தைரியம், சுற்றுலா மற்றும் கலாச்சாரத்தைப் பொறுத்தவரை, நீங்கள் அனைவரும் உண்மையில் இந்த ‘தேவபூமியின்’ தூதுவர்கள்.

உங்கள் ஒவ்வொருவரையும் ஒரு தூதுவர் என்று அழைப்பது மிகையாகாது. இந்த சாதனைக்காக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b