தவறான சிகிச்சையால் செவிலியர் மாணவி உயிரிழப்பு - சக மாணவிகளுடன் பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டம்
திருச்சி, 23 மே (ஹி.ச) புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, தொண்டைமாநல்லூர் பகுதியை சேர்ந்த சேட்டு என்பவரது மனைவி கலைச்செல்வி ஆவார். விவசாய கூலித் தொழிலாளர்களான இவர்களது 19 வயதான மகள் சீதாலட்சுமி மூன்றாம் ஆண்டு செவிலியர் படிப்பு படித்து வ
தவறான சிகிச்சையால்  செவிலியர் மாணவி உயிரிழப்பு -  சக மாணவிகளுடன் பெற்றோர் சாலை மறியல் போராட்டம்


திருச்சி, 23 மே (ஹி.ச)

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, தொண்டைமாநல்லூர் பகுதியை சேர்ந்த சேட்டு என்பவரது மனைவி கலைச்செல்வி ஆவார். விவசாய கூலித் தொழிலாளர்களான இவர்களது 19 வயதான மகள் சீதாலட்சுமி

மூன்றாம் ஆண்டு செவிலியர் படிப்பு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு மூக்கில் சதை வளர்ந்ததாக கூறி திருச்சி புத்தூர் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரை பரிசுத்த மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என கூறினர்.

இதனை அடுத்து அவருக்கு நேற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அதிக அளவில் மயக்க மருந்து கொடுத்ததால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் சக மாணவிகள், மருத்துவரின் தவறான சிகிச்சையால் சீதாலட்சுமி உயிரிழந்ததாக குற்றம் சாட்டினர். அத்துடன், மாணவியின் பெற்றோர் மற்றும் சக செவிலியர்கள் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முன்பு இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மருத்துவமனை நிர்வாகத்தினரும் காவல்துறை அதிகாரிகளும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b